விமான விபத்து

விமான விபத்து

இருபத்தி ஐயாயிரம் உயரத்தில் பறந்து
இன்னும்
இரண்டு நிமிடங்களில்
இந்தியாவில்
இறங்கப் போகும் விமானம்

கனவுலகில் அனைவரும்


முப்பது வருடத்தை
துபாயில் தொலைத்துவிட்டு
முழுதாக வீடு திரும்பும் கனவோடு
குடும்பத்தலைவன்



பள்ளி விடுமுறையில்
பாட்டி தாத்தா
பார்க்க செல்லும்
பள்ளிச் சிறுவர்கள்

நாளை நடக்கவிருக்கும் தன்
திருமணத்திற்காக
நகைகளோடு பறக்கும்
இளம் வாலிபன்

முதல் குழந்தையை
முதல் முதல் பார்த்து
முத்தமிட துடிக்கும்
இளம் கணவன்

வருடாந்த விடுமுறையை
வசந்தமாக கழிக்க
குடும்பத்தோடு செல்லும்
குடும்பத்தலைவன்

படிப்பை முடித்துவிட்டு
பட்டத்துடன்
தாய், தந்தை, தங்கையை காப்பாற்ற செல்லும்
பொறுப்புள்ள மகன்

புது வேலையை
தக்க வைக்க
விசா மாற்ற செல்லும்
இளம் சாதனையாளன்

மருத்துவத்துக்காக
இந்தியா செல்லும்
மத்திய வயது
இதய நோயாளி

ஆபீஸ் வேலையாக
அவசரமாக புறப்பட்டிருக்கும்
இளம்
பொறியியலாளர்

புது வியாபாரத்தில்
பணத்தை புரட்ட
புறப்பட்டிருந்த
பக்கா வியாபாரி

கம்பீரத்தோடு
தன் பணியை செய்யும்
விமானிகளும்
சேவையாளர்களும்

ஒரு மூலையில்
ஒன்றுமே அறியாமல்
சத்தமிடும்
ஓர் சிறிய நாய் குட்டி


இரண்டு நிமிடம் கழிந்தது..........
ஒரு சிறு சத்தம்
விமானமும்
அனைத்து கனவுகளும்
தவிடு பொடி


அடுத்த சில நிமிடங்களில்.... புலம்பல்கள்


ஐயோ என் கணவர் நிரந்தரமாய் போய் விட்டாரே..
எனது பேரக் குழந்தைகளுக்கு ஏன் இந்த தண்டனை
மணமகனை எதிர் பார்த்த வீட்டில் மையத்து விழுந்து விட்டதே
பிறந்த குழந்தையை பார்காமலேயே போய் விட்டானே பாவி
ஐயோ என் வாரிசு முழுதையும் தொலைத்து விட்டேனே
எனது குடும்பத்தின் ஒரே ஆணி வேர் போய் விட்டானே
திறமையான வேலையாளை தொலைத்து விட்டோமே
மருத்துவத்துக்காக வந்தவருக்கே மரண தண்டனையா
பொருக்கி எடுக்கவா இந்த குழந்தையின் பாகங்கள்
துக்க தினம் பாடசாலை, கம்பனிகளிலும் முழு நாட்டிலும்

அடுத்த சில நிமிடங்களில்...

இன்னும் சிறிது நேரத்தில் துபாயிலிருந்து மங்களூரை நோக்கி விமானம் புறப்படும்
Please 'Fasten Your Seat Belt'

'நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமாக்கப்பட்ட கோட்டைகளில் நீங்கள் இருந்த போதிலும் சரியே.

அல் குர்ஆன் - சூரா அந்நிஸா (4) - வசனம் 78


ஆக்கம்

அபூ அம்மாராஹ்

No comments:

Post a Comment