ஒரு ரூபாயில் ஒரு சாம்ராஜ்யத்தை அழிக்க முடியுமா?

ஒரு ரூபாயில் ஒரு சாம்ராஜ்யத்தை அழிக்க முடியுமா?



ஒரு ரூபாயில் ஒரு சாம்ராஜ்யத்தை அழிக்க முடியுமா? ஆமாம். கேள்வி பதில் இரண்டும் குழப்பமாக உள்ளதா?

இன்று முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்காவும் யூரோப்பும் இஸ்ரேலும் போட்டி போட்டு சதி வேளைகளில் ஈடுபடுவது அனைவருக்கும் தெரிந்ததே. முஸ்லிம்களை மட்டுமல்ல, ஏன் மாற்று மதத்தவர்கள் அதிகமாக வாழும் இடங்களிலும் இவர்கள் ஆக்கிரமிப்புகள் அதிகம் அதிகம். தமது பண பலத்தால் குண்டுகளை பொழிந்து உயிர் சேதங்கள் புரிவதும் பெண்கள் கற்புகளை சூறையாடுவதும் பிறர் நிலங்களை அபகரிப்பதும், நீதிகளில் பாரபட்சம் காட்டுவதும் ஏராளம்.
அப்படி இருந்தும் நமது முஸ்லிம் சகோதரர்கள் தெரிந்தும் தெரியாமலும் இவர்களுக்கு பண உதவிகளை வழங்கி வருகிறார்கள். இஸ்ரேலின் துப்பாகிகளுக்கு ரவைகளை (Bullots ) போட்டுக் கொடுக்கிறார்கள். எப்படி?



சில காலம் முன் ஒரு மெயில் வந்தது. அதில் சில பொருட்களின் பெயர்களை தந்து இந்த கம்பனிகள் இஸ்ரேலை சேர்ந்தது அல்லது முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பொருளாதார உதவி செய்யும் கம்பனிகள் என்று. ஒரு கணம் இவர்கள் கருத்து சரியா தவறா என்று யோசிக்குமுன், இன்னொரு மெயில். இப்படியெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாம் இவ்வாறு இவர்கள் பொருட்களை புறக்கணித்து சில நூறுகளை சேமிப்பதால் இப்படிப்பட்ட முதலைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று. இன்று பலரும் இப்படி யோசித்து விட்டு மெயில்களை பூட்டி வைத்து விடுகிறோம்.
இதே காலப்பகுதியில் டென்மார்க் நாட்டில், எம் பெருமானாரை கேலிச்சித்திரமாக வரைந்ததும் உலகமே கொதித்தெழுந்தது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு தனி நபர்களும் டென்மார்க் பொருள்களில், தான் செலவழித்து வந்த ஒரு சில ரூபாய்களை நிறுத்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் ஒரு சில நாட்கள் மட்டுமே. பல கோடி நஷ்டம். முழு நாடும் திணறிப் போய் திண்டாடிவிட்டது. (அப்பொழுதும் இந்த வல்லரசுகள் தமது சதி வேலைகளை அரங்கேற்றியது). இதற்கும் மேல் மன்னிப்பு கடிதங்கள் வேறு. சில பத்திரிகைகள், இந்த நஷ்டத்தை ஈடு செய்ய இன்னும் குறைந்தது பத்தாண்டுகள் தேவை என்று உண்மையை வெளிச்சம் காட்டியது. இத்தனை மாற்றங்களும் ஒரு சில வாரங்களில் நடந்தது பெரிய யுத்தத்தினால் அல்ல. நீங்கள் ஒரு ருபாய் செலவில் ஏற்படுத்திய மாற்றத்தினால். இஸ்லாத்தின் ஆரம்ப வளர்ச்சியிலும் இந்த நடைமுறை காணப்பட்டது. பத்ர் யுத்தத்தின் ஆரம்பமும் பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் திட்டமே. இன்று பல நாடுகளில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதற்கு ஆரம்பமும் இதுவே.
புரிந்து இருப்பீர்கள். சற்று சிந்திப்போம் Coka Cola, johnson and johnson போன்றவை இல்லாமல் வாழ முடியாதா என்ன? Mc Donalds , KFC இல்லாமல் எத்தனை சத்தான ஆகாரம் உண்டு. சிந்திப்போம், இவற்றிலிருந்து வெளி வருவோம், நல்ல மாற்றத்தை உண்டு பண்ணுவோம்.... இன்ஷா அல்லாஹ்.


ஆக்கம்
அபூ அம்மாராஹ்
09/02/2011

No comments:

Post a Comment