பேஸ்புக்கில் சிதையும் சகோதரத்துவம்.

முகப் புத்தகம் (FACEBOOK) மூலம் பல நல்ல முகங்களை (உறவுகளை) தேடி வந்தால், இன்று முகப் புத்தகம் (FACEBOOK) இல்..
பல சகோதரர்கள் தனது முகமும் தனது இயக்கம் அல்லது அமைப்பின் முகமும் மற்றவர்களால் பாராட்டப்பட வேண்டும் என்று துடிப்பதும், மற்ற சகோதரர்களின் தனிப்பட்ட முகத்திரைகளை கிழிக்க வேண்டும் என்று போட்டி போடுவதும், இன்னொரு சகோதரனை முகம் குப்புற செய்து மண் கவ்வ வைப்பதால் சந்தோசப் படுவதும், முகம் பார்த...்து சலாம் சொல்லி வந்தவர்கள் இந்த முகப் புத்தக (FACEBOOK) சண்டைகள் மூலம் முகம் திருப்பி செல்வதும், முகஸ்துதிக்காக சிலர் சிலருக்கு பாராட்டு பாடுவதும், முகம் தெரியாத அடையாளத்திலிருந்து பிறர் குறைகளை அலசுவதும் சாதாரணமாகிவிட்டது.



தொழுகை ஆரம்பத்தில் வஜ்ஜஹ்து.. (உன் பக்கம் முகத்தை திருப்பிகிறேன்) என்று தொழுகையை ஆரம்பிக்கும் நாம், இந்த முகப் புத்தகத்தின் மூலமாக நாளை மறுமையில் நம் முகத்துக்கு எதிராக பல சாட்சிகளை உருவாக்குவதோடு நாமும் பல முகங்கள் நரகம் செல்ல சாட்சிகளாகிக்கொண்டிருக்கிறோம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் - பழைய மொழி
அகத்தின் அழகு முகப்புத்தக (Facebook) எழுத்தில் தெரியும் - புது மொழி

உங்கள் எழுத்துக்களையும், கமெண்ட்களையும் (பிறரை காயப்படுத்தாமல்) அழகாக்கிக் கொள்ளுங்கள்.

அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக.

No comments:

Post a Comment