A for APPLE (தமிழ்)

A for APPLE


A for APPLE அப்படினு எல்லோருக்கும் தெரியும்.  சரி எந்த வயசு வரை A for APPLE  தெரியாதுன்னு சொல்லாம்? அல்லது, எந்த வயசு வரை  A for APPLE தெரியல்லைனா   நமக்கே வெக்கமா இருக்கும்! இரண்டு, மூன்று, நாலு. Maximum நாலு வயசு சொல்லலாம். அதுவரைக்கும் தெரியலன்னா நிச்சயமா சமுதாயத்துல கல்வில நம்ம பின் தங்குறதுக்கு இது ஒரு ஆரம்ப அறிகுறி.

இதேதான் போட்டி போட்டு முட்டியடிச்சி A - Z Alphabet படிப்போம். அதுவும் ஐந்து வயசுக்குள்ள. நம்ம புள்ள படிச்சிட்டா, அப்பப்பா பேரன்ட்சுக்கு தனி பெருமை. வீடியோ ஆடியோ ன்னு எடுத்து SAVE பண்ணி வைப்போம்.    
    
சரி கொஞ்சம் மாத்தி யோசிப்போம். A for APPLE ஐ ஒரு முப்பது வயசுல படிக்க ஆசை பட்டால்,  இந்த வார்த்தைகளை படிக்க ஸ்கூல் தான் போக முடியுமா? கொஞ்சம் இடிக்கும். ரொம்ப கஷ்டப்பட்டு முதியோர் கல்வி போகணும். அதுக்கும் ரெடி தான். இல்ல ஒரு SPOKEN ENGLISH CLASS போறதுக்கும் ரெடி. சமுதாயமும் நம்ம முயற்சிய வரவேற்கும். தப்பு சொல்லலை.  

இப்படி நாமும் நம்ம குழந்தைகளும் போட்டி போட்டு முயற்சி செய்றது ரொம்ப சந்தோசம்தான். 


சரி.,


----------------------2 முதல் 6 வயது வரை A FOR APPLE தெரியாவிட்டால் வெட்கப்படும் நம்மில் பலருக்கு 50 வயது தாண்டியும் ALIF,BAA ,-குர் ஆன் ஓத தெரியவில்லை, தெரிய முயற்சிப்பதும் இல்லை ,மிகவும வேதனை பட வேண்டிய விஷயம். 

யோசித்து பார்த்தால்;
  1. காலேஜ் டேஸ் வரை, நாமோ, நம்  பிள்ளைகளோ குர்ஆனை ஒதாவிட்டாலும் நமக்கு கவலை இல்லை. அது 6 என்ன 60 வந்தாலும் கூட.  
  2. பாடசாலை வீட்டு வேலைகளுக்கு மணிக்கணக்கில் செலவழிக்கும் நாம் குர்ஆனை படிக்க, போதிக்க சில நிமிடங்களும் ஒதுக்க மாட்டோம்.
  3. Hindi, English வகுப்புகளுக்கு பணத்தை கொட்டும் நாம் இதற்கு எதுவும் செலுத்த தயார் இல்லை.
  4. Donation கொடுத்து  School Sheet வாங்க போட்டி போடும் நாம் பக்கத்திலுள்ள குர் ஆன் வகுப்பிற்கு சேர, சேர்க்க முயற்சிப்பதில்லை.
  5. 6 வயதில் மனனம் செய்த அதே சூராஹ்க்கள் தான் 60 வயது வரை தெரியும். 
  6. இன்னும் பலருக்கு முழு வாழ்நாளிலும் யாசீனும் ஒரு சில சூராஹ்களும் மட்டுமே தெரியும்.
  7. பலருக்கு இன்னும் குர்ஆன், தெரியாத மொழியில் கேட்கப்படும் கவிதையே.
கொஞ்சம் யோசித்தால் MAXIMUM இரண்டே வாரத்தில், சில மணி நேரம் செலவளித்தால் குர் ஆனை இலகுவாக ஓதி விடலாம். அது மட்டுமா வயதெல்லை இல்லாமல் சிரமமில்லாமல் கற்கக் கூடிய ஒரே நூல். ஓர் எழுத வாசிக்க தெரியாத உம்மி நப்பி, தனது வாலிப பருவத்தையும் தாண்டி 40 வயதுக்கு மேல் காதால் கேட்டே படித்த நூல். 

ஆனால், நாம் முயற்சிப்பதும் இல்லை,  முயற்சிக்க நேரமும் இல்லை. இந்த விசயத்தில் கண்ணை திறந்து கொண்டே தூங்கிக் கொண்டிருக்கிறோம். 

எழுந்திருங்கள் புறப்படுவோம். உங்களுக்கு நீங்களே இலக்குகளை தீர்மானியுங்கள். திட்டமிடுங்கள். முயற்சி எடுங்கள். இறைவனிடம் கையேந்துங்கள். இன்ஷா அல்லாஹ், இன்னும் ஒரு மாதத்திற்குள், நீங்களும் குர் ஆன் ஓத தெரிந்த ஒரு முஸ்லிம். 

இந்த பக்கத்தை பூட்டி விட்டு 2 அடி வைக்கும்போது, சைத்தான் மீண்டும் சோம்பலை உண்டு பண்ண போகிறான். போரிட்டு வெற்றி பெறுவோம்.

ஆக்கம்  
உம்மு அம்மாராஹ்

சிந்தனை 
நன்றி ஜலால் பாய்.

No comments:

Post a Comment