Baa Baa Black Sheep ... (தமிழ்)

Baa Baa Black Sheep ...

Baa, baa, black sheep,
Have you any wool?Yes sir, yes sir,Three bags full.
One for the master,
One for me,And one for the little boyWho lives down the lane. 
காலம் காலமாக கேட்டு வரும் குழந்தைகளுக்கான பாடல். 
நம் பெற்றோர், நாம், நம் குழந்தைகள், நம் பேரன்கள்.. என்று பல தலைமுறைக்கான பாட்டு.எழுதப்படாத ஒரு விதியாக, ஒவ்வொரு பெற்றோரும் தன குழந்தைக்கு கட்டாயமாக சொல்லிக் கொடுக்கும் பாட்டு. 

கருத்தை பார்த்தால்,
பா பா கருப்பு செம்மறியாடுஉன்னிடம் பருத்தி உண்டா?
ஆமா சார். ஆமா சார். மூன்று முழுப் பையில் உண்டு. 
ஒன்று மாஸ்டருக்கு.ஒன்று எனக்கு. இன்னொன்று, எனது தெருவில் உள்ள ஒரு பையனுக்கு. 
பேச்சு பயிற்சிக்கு உள்ள சிறு வார்த்தைகளை தவிர எந்த பயனும் இல்லை.இதே கதிதான் அத்தனை ரைம்சுக்கும்.
படிப்பதில் எதுவும் தவறில்லை. ஆனால் போட்டி போட்டு சொல்லிக் கொடுத்து பெருமை படும் பல பெற்றோர்கள்....தம் குழந்தைகளுக்கு சிறு துஆக்களை சொல்லிக் கொடுக்கிறார்களா?
மேற்கண்ட 30 + வசனங்களை  (இன்னும் பல ரைம்ச்களை) சொல்லிக் கொடுக்கும் பெற்றோர்கள்,    
RABBI ZIDNEE ILMAA (இறைவா என் ஞானத்தை அதிகப்படுத்துவாயாக) என்ற மூன்று வசனங்களையோ அல்லது இதர சிறிய துஆக்களையோ சொல்லி கொடுக்கிறார்களா? பலரது பதில் இல்லைதான். 
ஆனால் இந்த மூன்று வார்த்தைகளை குழந்தை சொல்லும்போது இறைவனின் பரகத் இறங்குகிறது, சுன்னத் பின்பற்றப்படுகிறது, தக்வா அதிகரிக்கிறது, அறிவு வளர்கிறது. இன்னும் பல நன்மைகள்..
காலம் காலமாக நாளாந்த துஆக்கள், காலை மாலை துஆக்கள், குர்ஆன், நபி வழி துஆக்கள், ETC தெரியாமல் இருக்கும் நாம் அதை படிப்பதும் இல்லை நம் பிள்ளைகளுக்கு அதனை சொல்லிக் கொடுக்க முனைவதுமில்லை. 
இன்ஷா அல்லாஹ், இனி நம் குழந்தைகளுக்கு ரைம்ஸ் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும் நேரத்தில், நம் உள்ளங்கள் குறு குறுக்கட்டும். நல்ல கருத்துள்ள சிந்தனைகளை நம் குழந்தைகளிடம் வளர்ப்போம். நாளாந்த துஆக்கள், திக்ர்கள், சுன்னத்களோடு நம் வாழ்வை அமைத்து நம் குழந்தைகளையும் அவ்வாறே வளர்ப்போம். 
ஆக்கம்அபு அம்மாராஹ் 
சிந்தனைநன்றி: ஜலால் பாய்            
       

No comments:

Post a Comment