ரமலானை பயனுள்ளதாக்குவோம்


அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் கிருபையால் மற்றொரு ரமலானை அடைந்துள்ளோம்.

நாம் பத்தோடு பதினொன்றாக மாத இறுதியில், "ரமலான் எவ்வளவு வேகமாக பறந்து போய் விட்டது" என்று சொல்லாமல், பல நல்ல மாற்றங்களை கொண்டு வந்து இந்த ரமலானை இன்னும் நல்ல படியாக பயன்படுத்தலாமே... இன்ஷா அல்லாஹ்...

1.
பள்ளி காலம் முதல் இன்று வரை ரமளானில் 1 குர்ஆன் தமாம் அல்லது சில ஜூஸ்கள் என்று வருடா வருடம் அதே எல்லையில் நிற்கிறோம். சம்பளம், வசதி வாயப்பு, உலகக் கல்வி என்று அத்தனையும் வருடா வருடம் கூட வேண்டும் என்று நினைக்கும் மனிதன், அமல்களை அதே வரையறையில் நிறுத்தி விடுகிறான். இதை ஏன் அதிகரிக்கக் கூடாது? ஏன் வருடம் தோறும் 2 குர்ஆன் தமாம் /அதிக ஜூஸ்கள் என்று மாற்றக் கூடாது? நிச்சயமாக உமது எண்ணம் பலமாக இருந்தால் உங்களால் இந்த இலக்கை அடைய முடியும்.

2.
கடந்த பல வருடங்களாக ஒரு சில சூராக்களை மட்டுமே மனனம் செய்துள்ள நாம், ஏன் புது சூராஹ்க்களை மனனம் செய்ய முயற்சி செய்யக் கூடாது? ஆபீஸ் டேபிளில் தினம் ஒரு சூராஹ் Print Out ஐ வைத்தாலே இலகுவாக மனனம் செய்து விடலாம். பெண்கள் சமையல் செய்யும்போது தொடர்ச்சியாக ஒரு சூராஹ்வை கேட்பதால் இலகுவாக மனனம் செய்யலாம்.

3.
சிறு சூராஹ்க்களின் பொருட்களை இந்த ரமளானில் மனனம் செய்வதால், தொழுகையில் அதிக ஈடுபாட்டுடன் கவனம் செலுத்தலாம்.

4.
குர்ஆன் ஓதத் தெரியாதவர்கள் ஏன் இந்த ரமலான் முடியுமுன் ஓதக் கூடியவராக மாறக் கூடாது? சாதரணமாக ஓதக் கூடியவர்கள் ஏன் தஜ்வீத் படிக்க முயற்சி செய்யக் கூடாது? வெளியூர் வேலைக்காக ஹிந்தியும், அரபியும், ஆங்கிலமும் சில மாதங்களில் படிக்க கூடிய எமக்கு ஒரு ரமளானில் குர்ஆனை படிக்க முடியாதா என்ன?


5.
போடாத பல நல்ல ஆடைகளை அடுக்கி வைத்து அழகு பார்க்கும் நாம், சதகாகளுக்கு பன்மடங்கு கூலி கிடைக்கும் இந்த மாதத்தில், இவற்றை ஏன் பிறருக்கு பயன்பெறுமாறு சதகா செய்யக் கூடாது?

6.
வசதி படைத்த செல்வந்தர்கள், சில அரிசி மூடைகளையும், மளிகை சாமான்களையும் வாங்கி மிகவும் வறுமையில் இருக்கும் ஏழைகளுக்கு நோன்பு ஆரம்பத்தில் கொடுப்பதன் மூலம், சஹார், இப்தார் நன்மைகளை கொள்ளையடிக்கலாம். மேலும் ஒரு குடும்பம் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய ரிஸ்கை கொண்டு நோன்பு பிடித்து நோன்பு திறந்தால் எத்தனை பாக்கியம்?

7.
வாழ்கையில் ஒரு முறையேனும் நபிகளார், கலீபாக்கள், நபித் தோழர்கள், நபித் தோழிகள் வரலாறை படிக்காத பலர், தினமும் ஒரு 15 நிமிடத்தை ஒதுக்கி ஓரிரு வரலாறுகளை முழுமையாக படித்து அல்லது ஆடியோ வில் கேட்டு முடிக்கலாமே. எத்தனை பெண்களுக்கு ஆயிசா நாயகி, கதிஜா நாயகி, etc போன்றோரின் முழு வரலாறு தெரியும்?

8.
இப்தார் நன்மையை கொள்ளையடிக்க நினைத்து, வசதி படைத்தவர்கள் வசதி படைத்தவர்களுக்கு மட்டும் இப்தார் வழங்காமல் பல ஏழைகளையும் சேர்க்கலாமே. வெளியூர் சகோதரர்கள் பலர் ஒரு சிலருக்கு மட்டுமே மாற்றி மாற்றி இப்தார் வழங்காமல். Labour Camp போன்ற இடங்களில் கஷ்டப்படும் சகோதரர்களுக்கு சந்தோசமாக ஒரு இப்தார் கொடுக்கலாமே.

9.
கடைசி 10 நோன்பில் பெருநாள் ஆடை வாங்குகிறோம் என்று லைலதுல் கத்ரை தொலைக்காமல், இப்பொழுதே அந்த வேலைகளை முடித்து வைக்கலாமே.

10.
சகாத் ஒழுங்காக கொடுக்காதவர்கள், அதனை மாற்றி இப்பொழுதிருந்து சரியாக கணக்கு பார்த்து நம் கடமையை நிறைவேற்றலாம்.

11.
பல நாட்களாக பேசாமல் இருந்த உறவுகளை சந்தித்து, நீயா நானா என்று எண்ணாமல், மன்னிப்பு, சகிப்புத்தன்மையை விரும்பும் அல்லாஹ்வுக்காக நாம் அவர்கள் உறவுகளை புதுப்பிக்கலாமே.

இன்னும் பல.... இன்ஷா அல்லாஹ், ரமலான் இறுதியில், உமது உள்ளங்கள் உமக்கு சாட்சியாக... "பல வருடங்களுக்கு பின் ஒரு மிகப் பெரிய மனதிருப்தி இந்த ரமளானில் எனக்கு இருந்தது என்று கூறுமானால்... அதுவே ஒரு வெற்றியின் ஆரம்பம். இன்ஷா அல்லாஹ்..

ரமளானில் கற்ற நல்ல பழக்கங்கள் ரமளானின் பின்னும் எம்முள் தொடர அல்லாஹ் அருள் புரிவானாக.

(மெயிலை வாசித்தோம், அதை அமுல் படுத்த நினைத்தோம், ஆனால் அதற்குள் ரமலான் முடிந்து விட்டது என்று கூறுபவராக இல்லாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக)

- அபு அம்மாராஹ்

No comments:

Post a Comment