ரமலான் பறந்து போச்சி...

அஸ்ஸலாமு அலைக்கும்,



நோன்பு வந்ததும் தெரியல போனதும் தெரியல..

பதினெட்டு நோன்பு பறந்து போச்சு.

இன்று யாரை சந்தித்தாலும் இதுதான் பேச்சு.


பறந்து போவதற்கு ரமலான் என்ன எமிரேட்ஸ் ஏர்லைன்சா?

சிந்தியுங்கள்..

நீர், காற்று, உணவு என்று உலகில் அனைத்தையும் அதிகமாகவே அள்ளி வழங்கும் இறைவன், குர்ஆனுடைய மாதத்தை பரகத் இல்லாமலா வைத்திருப்பான்? இல்லவே இல்லை. குறை ரமளானில் இல்லை, நம்மிடம்தான்.

ஆண்கள் கூறும் குறை.

ஆபீஸ் வேலை முடிந்து வரும்போது களைப்பாக இருக்கிறது. அதனால் நேரமே இல்லை.

பெண்கள் கூறும் குறை.

வீட்டு வேலைகள். ரமலான் ஏற்பாடுகள். அதனால் நேரமே இல்லை.

நேரம் நம்மை ஒதுக்காது. நாம்தான் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

நாளை முதல், உமது ஆபீசில் ஓவர்டைம் பார்ப்பவர்களுக்கு. ஒரு மணிநேரத்துக்கு 10 மடங்கு சம்பளம் தருவதாக கூறினால் அடுத்த கணம் அத்தனை ஆண்களும், அடுத்த விடயங்களை ஒதுக்கி விட்டு நேரத்தை ஒதுக்கி விடுவார்கள்.

அதையே அல்லாஹ் 1000 மடங்கு கூலி தருவதாக கூறினாலும் நாம் போட்டி போட மாட்டோம்,

ஏனென்றால், அது நம் வங்கி கணக்கிலோ காசாகவோ வராது.



நேரமில்லை என்று புலம்பும் சில பெண்களுக்கு

இப்தாரின் பின் கொஞ்சமாக டிவி பார்க்க நேரம் கிடைக்கிறது (எல்லோரும் அல்ல)

கேட்டால் நோன்பு திறந்து விட்டோம் தானே..



அடுத்த புலம்பல். அதிக வெயில் அதனால் அதிக களைப்பு.

ரமலான் மாதத்தில், பாலை மணலில் பத்ர் களத்தில் சஹாபாக்கள் காணாத சிரமமா?

வெளியூர்களில் உயர் மாடி கட்டிட வேளைகளில் வேலை செய்யும் லேபரர்கள் பார்க்காத சிரமமா?



சிந்திக்க வேண்டாமா?

SALE என்று போட்டால் கடைகளில் கூட்டம்.

ரமலான் மாதமும் அடியார்களுக்கு SALE தான்.

கொஞ்சம் அமல்களுக்கே அதிக நன்மை.

கொடுக்கும் நேரத்தை விட கிடைக்கும் இலாபம் அதிகம்.



இனி நாம் தேட வேண்டியது லைலதுல் கத்ர்.

ஆனால் பலர் தேட காத்திருப்பது

அழகான ஆடைகளும் அதற்கேற்றாற்போல் அலங்காரங்களும்.



இதுவரை தொலைத்துவிட்ட நொடிகள் போதும்.

இனிமேலாவது சிந்திப்போம்.

இன்ஷா அல்லாஹ் நம் அமல்கள் கூடட்டும்

இரவுகளில் அமல்களால் நாம் கால்கள் வலிக்கட்டும்

இந்த கணம் முதல்.



வஸ்ஸலாம்

- அபு அம்மாராஹ்

No comments:

Post a Comment