LATEST TECHNOLOGY AND QURANIC LIFE


LATEST TECHNOLOGY AND QURANIC LIFE

அஸ்ஸலாமு அழைக்கும் .,

TV / COMPUTER / MOBILE / LAPTOP / 3G / IPOD / TABLETS .,ETC. போன்ற இன்றைய LATEST TECHNOLOGY DEVICES உலகையே ஆக்கிரமித்துள்ளது. :

இவை இல்லாத உலகத்தை, ஏன் ஒரு நாளை கூட மனித மனங்கள் ஏற்க மறுக்கிறது.

நீளம் புயலில் அநேகமாக எல்லோர் வீட்டிலும் நடந்து இருக்கும் , மின்சாரம் இல்லை ., இருந்த ஒரு ஒரு TECHNOLOGY யும் ஒன்றன் பின் ஒன்றாக CHARGE போக போக , கடைசியாக INVERTER ல CHARGE பண்ணுவோமா என்றும் முயற்சித்து இருப்போம் , அனைத்துமே செத்ததும் . ஏதோ உலகமே இருண்ட மாதிரி , நமக்கும் உலகத்திற்கும் தொடர்பு விட்டு போன மாதிரி உணர்வு .

இத்தனையும் சில பல உலக தொடர்புகளை, நம் மனங்கள் சில நொடிகள் இழக்க தயாராக இல்லை என்பதை காட்டுகிறது.

நம் வீடுகளில் நெட் CONNECTION வேண்டும் என்றால் ஒரு PHONE , அதுவும் தாமதமானால் CUSTOMER CARE COMPLAINT ETC.மறுநாள் வீட்டில் NET..., அவ்வளவுதான் .,

ஆனால் இவை அனைத்தையும் விட பெரிய TECHNOLOGY நபி காலத்தில் இருந்தது ...... ஆம் உலகையும் தாண்டி இறைவனிடம் இருந்து நேரடி தொடர்பு ..... வஹியின் மூலம். இதனால் இறைவனின் நேரடி கண்காணிப்பில் சஹாபாககள் இருந்தார்கள் தவறு செய்யும்போது எச்சரிக்கையும், நன்மை செய்யும்போது அங்கீகாரமும் கிடைத்தது.

அவர்கள் இறைவனிடம் இருந்து வரும் வஹி க்காக எவ்வளவு காத்து கிடந்தார்கள். நம்மால் ஒரு நிமிடம் போன் இல்லாமல் இருக்க முடியாது. அப்படி என்றால் நபிகளாரும் சஹாபாக்களும் ஒவ்வொரு வஹியின் எதிர்பார்ப்பிலும், இடை வெளியிலும் எவ்வாறு எதிர்பார்ப்புடன் இருந்து இருப்பார்கள்?

வஹியின் இடைவெளிக் காலத்தில் நபி ஸல் அவர்கள் திடுக்கமும் கவலையும் நிறைந்தவர்களாக காணப்பட்டார்கள் . இது பற்றி ஸஹீஹுல் புஹாரியில் வருவதாவது :

இரண்டாவது வஹ்யி வருவதற்கு சிறிது காலதாமதமானது . அதனால் நபி ஸல் அவர்கள் கவலையடைத்தார்கள் . மலை உச்சியிலிருந்து கீழே குதித்து விட பலமுறை முனைத்தார்கள் . அவ்வாறு கீழே குதித்து விடுவதற்காக ஏதேனும் மலை உச்சிக்கு செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் ஜிப்ரீல் அலை தோன்றி " முஹம்மதே ! நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர் தான் " என்று கூறுவார்கள் . இதை கேட்டதும் நபி ஸல் அவர்களின் பதற்றம் தணிந்து மனம் சாந்தி பெரும் . பிறகு திரும்பி விடுவார்கள் . வஹ்யி வருவது தாமதமாகும் போதெல்லாம் அவ்வாறே செய்யத் துணிவார்கள் . அவர்கள் முன் ஜிப்ரீல் அலை தோன்றி முன்னர் போலவே கூறுவார்கள் .

இது மட்டுமா? இன்று போல் ஒரு MOUSE CLICK இலும் ஒரு HELLO விலும தொடர்புகள் ஏற்பட்டதா? இந்த இறை செய்தியை எத்தனை கஷ்டத்தோடு பெற்றார்கள்?

வானவர் நபியவர்களிடம் வந்து ஓதுவீராக என்றார் , அதற்கவர்கள் நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றார்கள் , அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் இந்நிலையைப் பற்றி பின்வருமாறு விவரித்தார்கள் : பிறகு அவர் என்னை பிடித்து நான் சிரமப்படும் அளவுக்கு இறுக கட்டியணைத்தார் .,

இதுபோல மூன்று முறை கட்டியனைத்த பின்னர் இதயம் நடுங்க கதீஜா ரலி அவர்களிடம் வந்து என்னை போர்த்துங்கள் என்னை போர்த்துங்கள் என்றார்கள் .

இராண்டாம் முறை வஹ்யி வரும் போது நபி ஸல் கதீஜா ரலி யிடம் என்னை போர்த்துங்கள் , குளிர்ந்த நீரை என் மீது ஊற்றுங்கள் என்றார்கள் .........

வானவர் மணியோசையை போன்று வருவார் . இந்த வகையே நபி ஸல் அவர்களுக்கு சுமையாக இருக்கும் . நபி ஸல் அவர்களை வானவர் தன்னுடன் இணைத்து கொள்வார் கடுங்குளிரிலும் நபி ஸல் அவர்களுக்கு வியர்வை பெருக்கெடுத்து ஓடும் . அவர்கள் வாகனத்தில் அமர்ந்திருந்தால் வஹ்யின் சுமை தாங்காது அந்த வாகனம் அப்படியே தரையில் அமர்த்துவிடும் . ஒரு முறை நபி ஸல் அவர்களின் கால் ஜைது இப்னு ஸாபித் ரலி அவர்களின் கால் மீது இருந்த நிலையில் வஹ்யி வந்தது . அதன் சுமை அவர்களின் காலைத் துண்டித்து விடும் அளவுக்கு மிகக் கடினமாக இருந்தது .

இன்று நமக்கு BUTTON தட்டினால் TAMILILQURAN.COM , READISLAM.COM , TAMILQURAN.COM இன்னும் பல ....... எவ்வளவு எளிதாக கிடைகிறது .... படிக்கதான் கடினமாக உள்ளது ..... இவ்வவளவு கடினமாக , கஷ்டப்பட்டு வந்த இறை வார்த்தைகள் இன்று நம் கையில் லேசாக கிடைகிறது ........

இன்ஷா அல்லாஹ் , அடிகடி குர் ஆன் திறப்போம் ., அது வந்த விதத்தை மனதில் நிறுத்துவோம் ...... ஓதுவோம்

நபி இறந்த பின் உம்மு ஐமன் ரலி அவர்கள் அண்ணல் நபியின் மரணத்தால் கடும் துயரத்திற்கு ஆளானார்கள் . மனம் நொந்து அழுது அழுது கடுமையான பலவீனம் ஏற்பட்ட பிறகும் அவர்களின் அழுகை நிற்கவே இல்லை ! இதனை கேள்விப்பட்டதும் அபூ பக்ரு ரலி அவர்களுக்கு உமர் ரலி அவர்களும் வந்து உம்மு ஐமனைத் தேற்றினார்கள் . அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் இவ்வாறு கூறினார்கள் : " ஏன் இவ்வவளவு தூரம் கவலைப்படுகிறீர்கள் ! நபி ஸல் அவர்களுக்கு இறைவனிடத்தில் மிகச் சிறந்த சன்மானங்கள் உள்ளன ., அதற்க்கு உம்மு ஐமன் ரலி அவர்கள் " இது தான் எனக்கு தெரியுமே ! நான் அழுது கொண்டிருப்பது இறை செய்தியின் வருகை வஹீ நின்று விட்டதே என்பதற்காகத்தான் என்று பதில் அளித்தார்கள் . இதனை கேட்டதும் அவர்கள் இருவரின் நெஞ்சமும் இளகியது . அவர்களும் அழலாயினர் - ஸஹீஹ் முஸ்லிம் .

இது தான் LIVE TECHNOLOGY - LIFE TECHNOLOGY. உண்மையான இறை தொடர்பு.

இன்ஷா அல்லாஹ் MOBILE, TV, INTERNET இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று பெருமை பேசு முன், குர்ஆன் இல்லாமல் என்னால் இருக்க முடியாது, குர்ஆன் ஓதாத ஒரு நாளை எண்ணிப் பார்க்க முடியாது, குர்ஆன் தமிழாக்கம் படிக்காத உள்ளதை நினைத்து பார்க்க முடியாது, குர்ஆன் பிரதிபலிக்காத வாழ்கையை சிந்திக்கவும் முடியாது என்று ஒவ்வொரு நொடியும் குர்ஆனின் நிழலில் வாழ்வோமாக .

குர் ஆன் பக்கங்களை புரட்டி புரட்டி பழையது ஆக்குவோம் , மனம் நிறைவு கொள்வோம்.

உம்மு அம்மாராஹ் .

No comments:

Post a Comment