இப்படியும் செய்யலாம் / உதவலாம் - பாகம் 3

இப்படியும் செய்யலாம் / உதவலாம் - பாகம் 3


அளிப்F , Bபா, தா, சொல்லிக் கொடுப்போம்.



ஒரு மஸ்ஜிதின் மூலையில் தினமும் இஷாவுக்குப்பின் சுமார் 15 நாட்களாக ஒரு முதியவர் திக்கித் திக்கி குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தார். இவருக்கு படிப்பிக்கும் ஆசானோ ஒரு ...சிறு பையன். யாரும் எதுவும்நினைப்பார்களோ என்று கொஞ்சமும் தயங்காத ஒரு தைரியமான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்.
இன்னொரு பக்கம், "நானும் இவனும் பல ஆண்டு நண்பர்கள், பள்ளிக்கூடத்தில் ஆரம்பித்த நட்பு, இன்று பேரன் பேத்தி கண்ட பின்னும் இன்னும் எங்கள் நட்பு தொடர்கிறது. போகாத இடம் இல்லை, செய்யாத சேட்டை இல்லை, பள்ளிப்படிப்பு முதல் டிரைவிங், ஸ்விம்மிங் என்று ஒருவருக்கொருவர் படித்துக் கொடுத்த விடயங்கள் ஏராளம். இப்பொழுது வியாபார நண்பர்கள் கூட". இரு நண்பர்களின் மார்தட்டல் இது.
"இவள் வெளியூர் வரும்போது ஒன்றுமே தெரியாது.

திருமணம் முடித்த சில நாட்களிலேயே வந்து விட்டால். என் பக்கத்து வீடு. சமையலிலிருந்து ஒவ்வொரு விடயமும் நான்தான் சொல்லிக் கொடுப்பேன். இப்பொழுது அவளே அவள் வேலையை செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டாள்". ஒரு குடும்பப் பெண்ணின் வாக்கு மூலம்.
இப்படி நம் ஒவ்வொருவருக்கும், ஒரு சில நட்புகள் இருக்கும். சில நட்புகள் மிக நீண்ட நட்பாக இருக்கும். நாமும் அதிகமாக பலருக்கு உதவி இருப்போம் அல்லது நமக்கு பலர் பலவற்றை கற்றுத் தந்து இருப்பார்கள். ஆனால், இந்த நட்புக்களில் குர்ஆனை நன்றாக ஓதிய ஒருவர், ஓதத்தேரியாத தனது நண்பருக்கு ஓதிக் கொடுத்து இருப்பாரா அல்லது அதற்கு ஊக்கம் அளித்து இருப்பாரா என்றால் அது ஒரு கேள்விக்குறியே.
ஏன் இந்த நிலை? வெளியூர் வேலைக்காக அல்லது பதவி உயர்வுக்காக 6 மாதத்தில் FRENCH, HINDI என்று படிக்க தயாராக உள்ள நாம் அல்லது சுமார் 15 வருடங்கள் பள்ளிக் கூடத்தில் 8 மணி நேரம் தினம் செலவழிக்க தயாராக உள்ள நமக்கு, சிறு பருவத்திலும் குர்ஆனை படிக்க ஆசை இல்லை. இப்பொழுதும் இல்லை. வெட்கத்தை விட்டு பல விடயங்களை கேட்க தயாரக உள்ள நமக்கு அளிப்F , Bபா, தா சொல்லித் தாருங்கள் என்று கேட்க மிகப்பெரிய கவுரவக்குறைச்சல்.
"ABCD எனக்குத் தெரியாது" என்று தன் குழந்தை 4 வயதில் சொன்னால் பெற்றோருக்கு வெட்கம், ஆனால் 40 வயதிலும், எனக்கு குர்ஆன் ஓதத் தெரியாது என்று வெட்கப்படாமல் சொல்ல நாம் தயார். "என் மகள் முழுக் குர்ஆனையும் 10 வயதிலேயே முடித்து விட்டால். ஆனால் எனக்குத்தான் ஓத வராது" என்று கூறும்போது வீட்டிலேயே ஒரு ஆசிரியை இருப்பதை மறந்து விடுகிறார்கள்.

இன்னும் சொன்னால் ஜிலேபி போல் கடினமான எழுத்துக்கள் உள்ள ஹிந்தி, தமிழை படிக்க முடியும். இலகுவில் நியாபகம் வைக்ககூடிய அரபு எழுத்துக்களை மனதில் பதிய தயாராக இல்லை
வாசிக்கும்போதே சிலர், "யப்பா இது நமக்கு பொருந்தாது, நம்மதான் சின்ன வயசுல ஒதிட்டோம்ல" என்று கூறும் கணம் கொஞ்சம் சிந்தித்தால், பலருக்கு சரியான தஜ்வீத் முறைப்படி ஓததேரியாது. இந்த முயற்சிக்கு சில மணித் துளிகளே தேவைப் பட்டாலும், அதற்கு நேரமும் ஆவலும் இல்லை. "எனக்கு நல்ல ஆங்கிலம் வரும், இருந்தாலும் நாக்கு நுனியில் பேசுற மாதிரி பேசுனாதான் நல்லா இருக்கும்", அதான் SPOKEN ENGLISH போறேன் என்று கூறுவோர் எத்தனை பேர்?
"கல்ப்" என்ற ஒரே வார்த்தைக்கு பெரிய "காப்" உச்சரிப்பில் "இதயம்" என்றும் சிறிய "காப்" உச்சரிப்பில் "நாய்" என்றும் வரும் அர்த்தத்தை பார்க்கும்போது, உங்கள் உள்ளங்கள் தஜ்வீத் படிக்க துடிக்க வேண்டும். இல்லை எனில் எங்கள் "இதயங்களை புரட்டி விடாதே" என்று கேட்கும் பிரார்த்தனை " எம் நாய்களை புரட்டி விடாதே" என்று அர்த்தம் கொடுத்து விடும்.
இதை எல்லாம் அல்லாஹ் அறிவான். அப்படியெல்லாம் பிடித்து விட மாட்டான் என்று கூறும் நம் உள்ளங்களை கொஞ்சம் அடக்கி விட்டு, நான் ஏன் அழகிய முறையில் ஓதக் கூடாது என்று சிந்திக்க வேண்டும்.
"உங்களில் சிறந்தவர் தான் குர்ஆனை கற்று பிறருக்கு கற்றுக் கொடுப்பவரே" என்ற நபி மொழிப்படி நாமும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு குர்ஆனை ஓதிக் கொடுக்க வேண்டும். பக்கத்து வீடுகளை நெருங்கிய நண்பர்களை, ஒட்டியுள்ள உறவுகளை எட்டிப் பாருங்கள். "பயனுள்ள கல்வியை தா" என்று கேட்கக் கூடிய நாம், நமக்கு ஓதத் தெரிந்த குர்ஆனை பிறருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டாமா?
"ஒருவர் எந்த அளவு குர்ஆனை ஒதுகிறாரோ, அந்த அளவு அவரது படித்தரம் நாளை மறுமையில் உயர்வதாகவும்" இன்னொரு அறிவிப்பில் "ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் இருப்பதாகவும்" எம் பெருமானார் சொன்னார்கள்". இதனை நாம் மட்டும் சுயநலவாதிகளாக அனுபவிக்க வேண்டுமா?
புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இறந்த பின்னும் உங்களுக்காக வரக் கூடிய ஒரு ஸதகதுல் ஜாரியா இது இது. ஒரே ஒருவரை நீங்கள் உருவாக்கினாலும், அது அவர் ஓதும் காலம் எல்லாம் உங்களுக்கும் நன்மை எழுதப் படும். பல முறை ஓதிக் கொடுக்கும்போது, ஓதக்கூடிய நன்மையும் கிடைக்கும் இந்த உதவியை செய்ய செல்வந்தராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ரூபாய் பணமும் தேவை இல்லை. இன்ஷா அல்லாஹ் தயாராகுவோம்.
இப்பொழுதே குர்ஆனின் மகிமையை புரிய வைத்து, அவர்கள் வெட்கத்தை களைத்தெறிந்து, இன்ஷா அல்லாஹ், அவர்களுக்கு வெளிச்சத்தை காட்டிக் கொடுப்போம். பேனாவை எடுத்து... யாரையெல்லாம் குர் ஆனை ஓதக் கூடியவர்களாக மாற்றப் போகிறேன் என்று பட்டியலிடுங்கள். வயது வரம்பு கிடையாது. புறப்படுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்பாளிப்பானாக.
வஸ்ஸலாம்

அபூ அம்மாராஹ்

abuammaarah@yahoo.comSee More

No comments:

Post a Comment